1.3K
- Gond Katira benefits in Hindi – फायदे, नुकसान, उपयोग और सावधानियां
- Tata 1mg Capsules
- गाजर खाने के फायदे एवं औषधीय गुण – Health Benefits of Carrot
- श्री स्वामी समर्थ तारक मंत्र के फायदे
- Black Pepper Benefits: 4-5 दाने इस काली मिर्च के रोज चबालें, फिर देखें बॉडी में कैसे आते हैं ये 5 बदलाव, निखर कर सामने आएगी हेल्थ
நன்றி குங்குமம் டாக்டர்
உயிர்தொழில்நுட்பத் துறை முனைவர் ஆர். சர்மிளா
சாலையோரங்களிலும், தரிசு நிலப்பகுதிகளிலும் பரவலாக காணப்படும் ஒருவகை களைச்செடி போன்று காட்சியளிக்கும் கீரைதான் மூக்கிரட்டை கீரை. இந்த கீரையை உணவில் சேர்த்துக் கொள்ளலாமா என்ற சந்தேகம் பெரும்பாலானோருக்கு உண்டு. ஆனால் நமது முன்னோர்கள் இந்தக்கீரையை கலவை கீரையாக உணவில் சேர்த்து வந்துள்ளதாக தரவுகள் கூறுகின்றன.
Xem thêm : Chiku Khane ke Fayde: जानिए स्वास्थ्य के लिए
இக்கீரைக்கு சாரணத்தி, சாரணைக் கொடு, புனர்நவர் எனும் வேறு பெயர்களும் உண்டு. இது கிராமப்புறங்களில் அனைத்து தட்ப வெட்ப சூழலையும் ஏற்று நன்கு வளரக்கூடிய ஒருவகை கொடியாகும். இந்தக் கீரையில் அடர்நீல நீற பூக்கள் மற்றும் வெண்மை நிற பூக்கள் காணப்படும். பூக்களின் நிறங்களின் அடிப்படையில் இருவகை மூக்கிரட்டை கீரை உள்ளன. ஆனால் இரண்டுமே பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டு சிறந்து விளங்குகிறது.
மூக்கிரட்டை கீரையின் அறிவியல் பெயர் போயர்ஹேவியா டிஃப்யூசா ஆகும். இது நிகீடாஜினேகி எனும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. இது இந்தியா, இலங்கை, ஐரோப்பா, இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் காணப்படுகிறது. மேலும் இதனை ஒரு மூலிகைத் தாவரமாக நமது முன்னோர்கள் பயன்படுத்தி வந்திருப்பது சிறப்புக்குரியது. மூக்கீரட்டையின் இலை, வேர், தண்டு என அனைத்து பகுதிகளுமே மருத்துவ குணம் கொண்டவை.
மூக்கிரட்டையில் காணப்படும் சத்துக்கள்
மூக்கிரட்டையில் பிற கீரைகளில் காணப்படும் சத்துக்களை போன்று நார்ச்சத்து, சுண்ணாம்புசத்து, தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் ஏ,பி, சி காணப்படுகின்றன. இதில் காணப்படும் சத்துக்கள் மற்றும் தாவர மூலக்கூறுகளான சாந்தோன்கள், லிக்னான், அராகிடிக் அமிலம், போயரவினால் போன்றவையே இதில் அடங்கியுள்ள மருத்துவ பண்புகளுக்கு காரணமாக உள்ளன.
மூக்கிரட்டையின் மருத்துவ குணங்கள்
மூக்கிரட்டை சிறுநீரகக் கல், பித்தப்பை கல் பிரச்னைக்கு ஒரு சிறந்த தீர்வாக உள்ளது.உடலில் ஏற்படும் வாதம் சம்பந்தமான நோய்களை நீக்க உதவுகிறது. மூளைக்கு ஆற்றலை அழித்து சுறுசுறுப்பாக இயங்க உதவுகிறது.மூக்கிரட்டையை கீழாநெல்லியுடன் சேர்த்து சாப்பிட்டு வர மஞ்சள் காமாலை நோயை குணப்படுத்த முடியும்.முடக்கற்றான கீரையுடன் மூக்கிரட்டை கீரையை சேர்த்து சாப்பிட்டால் மூட்டுவலி பிரச்னையை சீர் செய்ய முடியும்.
செரிமானக் கோளாறு, மலச்சிக்கல் பிரச்னையை குறைக்க உதவும். சரும நோய்களை குணப்படுத்தி முகப்பொலிவினை மேம்படுத்த உதவும்.கீரைகள் இயல்பாகவே அதிக சத்துக்களைக் கொண்டுள்ளதால் ரத்தசோகை பிரச்னையை முழுவதும் குறைக்கக் கூடும்.சிறுநீரகம் மற்றும் கல்லீரலில் தேங்கியுள்ள நச்சுக்களை அகற்றி சிறப்புடன் செயல்பட உதவும்.உடலில் உள்ள தேவையற்ற நச்சுகளை அகற்றியும், கெட்ட கொழுப்புகளை நீக்கியும் உடல் எடையை சீராக வைத்துக் கொள்ள உதவும். இதயம் மற்றும் நுரையீரல் சம்பந்தமான பிரச்னைகளை சரி செய்யவும் உதவுகிறது.
ஆன்டி ஆக்ஸிடன்டுகள் இக்கீரையில் நிறைந்து உள்ளதால் தேவையில்லாத ஆக்ஸிஜன்களை உடலிலிருந்து அகற்றி நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுகிறது. இதன் இலைகள் கண் வீக்கத்தை குறைக்க உதவுகிறது. மலட்டுத்தன்மை போக்க உதவுகிறது.ரத்த சர்க்கரை அளவினை கட்டுப்படுத்த மூக்கிரட்டை உதவுகிறது. இவ்வாறு பல்வேறு நன்மைகளைக் கொண்ட இக்கீரையை சரியாக இனம் கண்டு முன்னோர்கள் அல்லது மருத்துவரின் ஆலோசனைப்படி உணவில் சேர்த்துக் கொள்வது நலம் பயக்கும்.
மூக்கிரட்டை கீரையை சமைக்கும் முறைகள்
மூக்கிரட்டை கீரையை ஆய்ந்து சுத்தம் செய்து பாசிப்பருப்புடன் சேர்த்து கூட்டாகவோ அல்லது பொரியல் செய்தோ சாப்பிடுவது வழக்கம்.உடல்எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு பெஸ்ட் சாய்ஸ் இந்த மூக்கிரட்டை கீரை. மூக்கிரட்டை பொடி என்றே கடைகளில் விற்கிறார்கள். இந்த பொடியை வாங்கி வந்து வெந்நீரில் கலந்து குடித்து வர உடல் எடையை நன்கு கட்டுக்குள் கொண்டு வரலாம்.
வேர்களை காயவைத்து, பொடிசெய்து, சுடுநீரில் கலந்து குடித்து வந்தால், கண்கள் சம்பந்தமான நோய்கள் தீர்ந்துவிடும்.மூக்கிரட்டை கீரையில் ரசம் வைத்து சாப்பிடலாம். இந்த கீரையை நன்றாக ஆய்ந்து சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில், 2 டம்ளர் தண்ணீர் விட்டு, அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் கொதித்ததும் சுத்தம் செய்து வைத்துள்ள கீரையை அதில் போட்டு கொதிக்க விட வேண்டும். கீரை நன்றாக வெந்ததும், தட்டிய பூண்டு பற்கள், சீரகத் தூள், மஞ்சள் தூள், மிளகுத்தூள், உப்புத்தூள் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.இந்த ரசத்தை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள சிறுநீர் கடுப்பு முதல் சிறுநீரக தொற்று வரை பறந்துவிடும்.
Nguồn: https://vuihoctienghan.edu.vn
Danh mục: फ़ायदा